நாளை வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு !

0
602 views

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்படும் என்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பெற கூட்டமைப்புக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
சுயேட்சைக் குழு இம்முறை தமது சார்பில் ஒருவரை முன்மொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மூன்று தரப்புகளும் இணைந்தாலும் கூட, 7 ஆசனங்களைத்தான் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையில், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவில் ஈபிடிபி முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்ததால் அவரது சார்பு உறுப்பினர்களின் நிலைப்பாடு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here