கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 24ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி, எதிர்வரும் 24ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை குறித்த பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு ரத்து செய்யப்பட்டு, அன்றைய தினம் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
அத்துடன், ஊரடங்கு சட்டம் ரத்து செய்யப்படும் வரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதுபானசாலைகளை மூடி வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் கடமைகளை இடையூறின்றி நடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்குமாறும் போலீஸாருக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.







