தமிழீழ விடுதலைப் போராளி மாவீரர் லெப் சங்கரின் நினைவுத் தூபிக்கு ஈகைச் சுடரேற்றி தமிழீழ மாவீரர் வாரம் எழுச்சி யூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
கம்பர்மலைச் சந்தியில் அமைந்துள்ள லெப் சங்கரின் நினைவுத்தூபிக்கு கப்டன் பண்டிதரின் தாயார் நேற்று ஈகைச்சுடரேற்றி மலர் அஞ்சலி செய்து மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
வடமராட்சி மாவீரர் ஏற்பாட்டுக்குழின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுத் தூபியில் மாவீரர்களான லெப் சங்கர் மேஜர் நித்திலா ஆகியோருடைய திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது .
தொடர்ந்து முதல் ஈகைச் சுடரினை கப்டன் பண்டிதரின் தாயார் ஏற்றி வைத்தார். தொடர்ந்து முன்னாள் போராளிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது