வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படும் வடமாகாண பாடசாலைகளிற்கு இடையிலான பூப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.
இதில் 17 வயது ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்த்து மன்னார் பற்றிமா மகா வித்தியாலயமும் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான ஆட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்த்து மன்னார் சென் சேவியர் கல்லூரியும் 17 பெண்களுக்கான இறுதியாட்டத்தில் மன்னார் பற்றிமா மகா வித்தியாலயத்தை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் 20வயது பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரியை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையும் மோதவுள்ளன.







