சிறுமி ஒருவரை மூன்று தடவை வன்புணர்வுக்கு உட்படுத்திய வடமராட்சி கிழக்குப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ் மேல் நீதிமன்றம்ஒவ்வொரு வன்புணர்வுக்கும் தலா 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.அத்துடன்இந்த கடூழியத்தை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 6 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் மேல் நீதிமன்றம்கட்டளை பிறப்பித்துள்ளது
2012 ஆண்டு வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சிறுமியை அதே இடத்தைச்சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மூன்று தகலை வன்புணர்வுங்கு உட்படுத்தியுள்ளார்.இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ் மேல்நீதிமன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றபோதே இத்தண்டனை வழங்கப்பட்டது