வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டி 2015

0
584 views

வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டியானது 30.05.2015 இன்று வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பி.ப 2.30 மணியளவில் வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.சி.தவராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம் திரு.அ.ஸ்ரீகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிராமசேவையாளர் J/389 திரு.வி.அருள்பஸ்ரியன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். புhலர் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமாகி பி.ப 6.30 மணியளவில் மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here