க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.12ஆம் திகதி ஆரம்பமாகும் இப் பரீட்சை 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இப்பரீட்சையில் நாடுமுமுவதிலுமுள்ள 5516 பரீட்சை நிலையங்களிலும் சுமார் 429399 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது