அகில இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட உதைபந்தாட்ப்போட்டியில் சம்பியனாகியது விளையாட்டுத்துறை அமைச்சு அணி.

0
333 views

 

அகில இலங்கை அரச அரச அலுவலர்களுக்கான உதைபந்தாட்ப்போடடித் தொடரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இறுதியாட்டம் நேற்று கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில்  விளையாட்டுத்துறை அமைச்சும் கடற்படை அமைச்சும் பலப்பரீட்சை நடத்தின.பரபரப்பாக இடம்பெற்ற முதல்பாதியாட்டத்தில் இரு அணியினரும் கோல் போட முடியாமல் திணற ஆட்டம் சமனிலை கண்டது.பிற்பாதியாட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுசார்பாக அல்போன்ஸ் மற்றும் லலித்ஜெயவர்த்தன ஆகியோர் இரண்டு கோல்களைப்பொட 2:0 என்று விளையாட்டுத்துறை அமைச்சு கிண்ணத்தை தமதாக்கியது.விளையாட்டுத்துறை அமைச்சின் அணியில் வடமாகாணத்திலிருந்த கிளிநொச்சி மாவட்ட கால்ப்பந்தாட்ப்பயிற்றுநர். எல் அனுராகாந்தன் யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர அ. வசந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here