வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் தேற்று முன்தினம் இடம்பெற்றன. இதில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் பல வருடங்களான வலயச் சம்பியனான உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் மதல்செற்றை பலத்த போராட்டத்தின் பின் 25:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் தொண்டைமானாறு வெற்றி பெற்றது இரண்டாவது செற்றை எப்படியாவது. வென்று சமனிலைப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய உடுப்பிட்டி அணி பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் 26:24 என ற் புள்ளிகள் அடிப்படையில் வென்று சமனிலைப்படுத்தியது .
தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற மூன்றாவது செற்றில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை அணி 25:22 என்ற புள்ளிகளைப் பெற்று 2:1 என்ற அடிப்படையில் வென்று இவ வருடச் சம்பியனாகியது









