பயணத்தடை தளர்வு தொடர்பான அறிவித்தல்

0
674 views

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை 28ம் திகதி வரை நீடிக்கும் எனவும் இடையில் சில தினங்கள் தளர்த்தப்படும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இது தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் வெளிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு,

எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் உள்ள பயணத்தடை 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு 21ம் திகதி நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து 25ம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பின் 25ம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு 28ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here