கடற்புறா – யவனராணி கதைகளில் நாம் படித்த சாதனைகளை விஞ்சும் கப்பல் தலைமை மாலுமி ஒருவர் நம்மிடையே வாழ்கிறார்.. அவரை அடையாளம் காட்ட இக்கட்டுரையை எழுதுகிறேன்..
சுவிற்சலாந்து நாட்டில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்த தகவலைப் பார்த்து மனம் மகிழ்ந்து வல்வையின் மகத்தான சாதனை மனிதர் கேப்டன் துரைலிங்கம் அண்ணா எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதமாகவும் இது அமைகிறது..
வாழ்த்துவதுதான் வாழ்க்கை.. யார் வாழ்த்துக்களை முன்வந்து எழுதுகிறார்களோ.. அவர்களுக்காக எழுதுவதே எனது எழுத்தின் ஜீவநாடி.. நம்பிக்கையூட்டும் ஒவ்வொரு மனிதரும் வணக்கத்திற்குரியவர்களே..
இனி விடயத்திற்கு வருகிறேன்..
அன்று உலக வல்வை ஒன்றியத்தை உருவாக்கிய தினம் மேடையில் ஒரு வாழ்த்துக் கடிதம் வந்திருந்தது.. திறந்து பார்த்தேன்.. வாழ்த்துடன் 500 ஸ்டேளிங் பவுண்சும் இருந்தது.. என்னால் நம்ப முடியவில்லை.. கீழே எழுதியுள்ள பெயரைப் பார்த்தேன்.. அது வேறு யாரும் இல்லை நம் துரைலிங்கம் அண்ணாதான்.. யாரால் முடியும்.. அவரால்தான் முடியும்..
வல்வையும்இ வல்வை மக்களும் முன்னேற வேண்டும் என்று இதயத்தால் உண்மையாக வாழ்த்தும் ஒருவர்..
வல்வையை முன்னேற்ற அவர் போட்ட திட்டங்களும்இ யோசனைகளும்இ வரைபடங்களும்இ நேர வாழிகாட்டிகளும் ஒரு கப்பல் கேப்டனுக்குரிய முறையில் அமைந்திருந்தன. அவரோடு இணைந்து வல்வையை பிரமாண்டமாக முன்னேற்றும் கனவுகளுடன் நடந்த அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.. நேர்மையாளர்.. குறைகளை நேருக்கு நேர் முகத்துக்கு அஞ்சாமல் சொல்லும் வைரநெஞ்சம் கொண்டவர்.. என்னதான் இருந்தாலும் கல்லுக்குள் ஈரம் போல வல்வை மக்களின் அடி உள்ளத்தில் மறைந்திருக்கும் ஈரம் நிறைய உள்ளவர்.
அவர் என்னைப்பற்றி சொன்ன செய்தி மிகப் பிரதானம்..
சாதாரண குடும்பத்தில் பிறந்து.. சாதாரண பாடசாலையில் படித்து.. சாதாரண ஆசிரியனாக இருந்த ஒருவன் தான் குடியேறிய நாட்டின் வளங்களை சரியாக பாவித்து கெலும் மக்ரேயுடன் தோளுக்கு தோள் நேராக நின்று வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியுள்ளானே எப்படி..?
நாம் தாய் நாட்டை இழந்து வந்தோம் அதனால் நிர்க்கதியாக நிற்கிறோம் என்றோ.. எல்லாம் இழந்தோமென புலம்பிச் சாவதோ வாழ்க்கையில்லை உலகில் எங்கு வாழ்ந்தாலும் வெற்றி பெறலாம் என்பதை உணருங்கள் என்று அவர் இதன் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
ஒரு நாள்..
அவருடைய கப்பல் பயணங்கள் பற்றிய அனுபவங்களை இங்கிலாந்தில் உள்ள அவருடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன்.. உலகக்கடற்பரப்பை அவர் எப்படி வெற்றி கொண்டார் என்பது எனக்கு மயிர்க்கூச்செறிய வைத்தது..
அன்னபூரணியின் சாதனையை நம்மால் கடக்க முடியாது என்பது போல இன்றுவரை வல்வையர்கள் பேசி வருகிறார்கள்.
உலக வல்வை ஒன்றியக் கூட்டத்தின் ஆரம்ப உரையின்போது.. அன்னபூரணியை சொல்லிக்கொண்டுஇ நாம் எதுவும் செய்யாமல் எத்தனை காலம் வாழப்போகிறோம்.. அந்தச் சாதனையை நாம்தான் உடைக்க வேண்டும்.. புதிய சாதனை படைக்க வேண்டும்.. அதற்காகத்தான் உலக வல்வையரின் முன்னால் நான் நிற்கிறேன் என்று பேசினேன்..
அதன் பின்னர் துரைலிங்கம் அண்ணாவுடனும்இ மணிவாசகர் அண்ணாவுடனும் தொடர்ந்து பேசினேன்..
மணிவாசகர் அண்ணாவின் சாதனை இமாலய சாதனை..
துரைலிங்கம் அண்ணாவின் சாதனை மயிர்க்கூச்செறியும் சாதனை..
அன்னபூரணியை அவர்கள் முந்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டேன்.. ஆனால் அதை எடுத்துச் சொல்ல நம்மிடையே மனவளம் போதவில்லை.. ஒப்புக்கொள்ள குறுகிய மனம் இடம் கொடுக்கவில்லை.
வரலாற்றில் வாழும் நம் மனம் நிகழ்காலத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.. உண்மை ஊமையாக நிற்கிறது என்பதைக் கண்டு கொண்டேன்..
துரைலிங்கம் அண்ணாவின் சாதனை சாண்டில்யனின் யவனராணியிலும்இ கடல்புறாவிலும் படித்ததைவிட பயங்கரமான மயிர்க்கூச்செறிய வைக்கும் நிஜக் கதையாகும்.
அவற்றை கடற் காவியங்களாக எழுத வேண்டும்.. நாட்களை கடத்துதல் கூடாது.. இதுவே அதற்கான தருணமாகும்..
அன்று..
வல்வை மக்கள் அவருடைய எழுச்சி திட்டங்களுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய நிலையில் இல்லை.. இன்றும் இருக்கிறார்களோ தெரியவில்லை.. ஆகவே வளர்ச்சி காலத்தினால் வரட்டும் என்று காலம் கனியும்வரை அவர் காத்திருக்கிறார் என்பதே அவர் பற்றி நான் அறிந்த உண்மையாகும்.
காலம் சென்ற அண்ணன் கேப்டன் மோனதாஸ்இ தொடங்கி இன்று நமது ஆதவன் என்று இலங்கையில் முதல் மூன்று கப்பல் கேப்படன்களில் நமது வல்வை வீரர்களே முன்னணி வகிக்கிறார்கள்.. ( எல்லோர் பெயர்களையும் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.. நிறையப் பெயர்கள் என்னிடம் உண்டு தருணம் வர எழுதுவேன்..)
அன்னபூரணி சாதனைக்கு இணையான பெரும் சாதனைகள் இவை..
இந்த மேதைகள் நம்மிடையே வாழ்வதை அறிந்து அவர்களை பயன்படுத்திஇ அவர்களுடைய சொல் கேட்டு முன்னேற இன்றைய வல்வை இளையோர் முன்வர வேண்டும்.
நேற்று..
என்னுடன் பழக்கமில்லாத..
எனக்கு முன்னர் தெரியாத..
வல்வை இளைஞர் ஒருவர் வல்வையில் இருந்து தான் கப்பலில் பயணிக்க இருப்பதாக என்னிடம் போன் செய்து.. பணம் கூறினார்..
என் கண்களில் நீர் வழிந்தது..
அது சாதாரண பயணம் அல்ல.. இந்த உலகத்தை வல்வையாக காணும் உன்னதம் நிறைந்த பயணம் கூறுதலாகும்..
இப்படி ஒவ்வொரு வல்வை இளைஞரும் சொல்லிச் சென்றால் அதைவிட எனக்கு இந்த உலகில் வேறென்ன பேறு இருக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள வல்வையருக்கு பெருமையுடன் சொல்ல ஆரம்பித்துள்ளேன்.
துரைலிங்கம் அண்ணா போல வெளிப்படையாக பாராட்டுவது பெருமை.. இப்படித்தான் வல்வை மக்கள் வாழ்வை செழிப்படைய வைக்க வேண்டும்.. குறைகளை பேசி குரோதம் வளர்ப்பவர்களை உடனடியாக திருத்த வேண்டும்.. அவர்களுடன் இணைந்து பேசக்கூடாது.. அடிக்கடி வாழ்த்துக் கூறும் கனடா ராஜ்குமாருக்கும் வாழ்த்துக்கள்..
மாபெரும் மனிதன் சாதனையாளன் துரைலிங்கம் அண்ணாவின் முன்னால் நான் ஒன்றும் இல்லை என்பதையும் இத்தருணம் தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்..
யவனராணி.. கடற்புறா.. இன்றைய கொலிவூட் திரைப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட சாதனைக் கேப்டன் துரைலிங்கம் அண்ணாவிடம் அவர் சாதனைகளை கேட்டு நானாவது எழுதலாம் என்று இக்கணம் எண்ணுகிறேன்.
கி.செல்லத்துரை டென்மார்க். 03.03.2016