வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் 15 வயதுப்பிரிவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் 17 வயதுப்பிரிவில் பருத்தித்துறை சென்தோமஸ் பாடசாலையும் 19 வயதுப் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையும் வெற்றி பெற்றுஇவ்வருடச் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த போட்டிகள் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.
உடுப்பி;ட்டி மகளிர் கல்லூரி எதிர் சென்தோமஸ் பாடசாலை
முதிலில் இடம்பெற்ற 15 வயதுப்பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும் பருத்தித்துறை சென்தோமஸ் பாடசாலை அணியும் மோதின.3 செற்களைக் கொண்ட இப்போட்டியில் 2:1 என்ற செற்கணக்கில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வெற்றி பெற்று இவ்வருட வலயச் சம்பியனாகியது.இப்பிரிவில் மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப்பாடசாலை பெற்றுக் கொண்டது.
சென்தோமஸ் பாடசாலை எதிர் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
தொடர்ந்து இடம்பெற்ற 17 வயதுப்பிரிவினருக்கான ஆட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் பாடசாலை அணியும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. மூன்று சுற்றுக்கள் கொண்ட இச்சுற்றுப்பொட்டியில் 2:0 என்ற நேர் செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது சென்தோமஸ் பாடசாலை அணி.இப்பிரிவில் மூன்றாமிடத்தை பருத்திதத்துறை மெதடிஸ் பாடசாலை பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து லீக்முiறியில் இடம்பெற்ற 19 வயதுப்பிரிவினருக்கான ஆட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி மற்றும் வல்வை மகளிர் கல்லூரி ஆகியவற்றை வீழ்த்தி 4 புள்ளிகளைப்பெற்று பருத்தித:தறை மெதடிஸ்த பெண்கள்பாடசாலை சம்பியனாகியது. இதில் இரண்டாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் மூன்றாமிடத்தை வல்வை மகளிர் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன
15 வயது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
17 வயது சென்தேமஸ் பாடசாலை
19வயது மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை