முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தமைக்கான காரணம் தெரியவந்தது!

0
420 views

சர்வதேச ரீதியில் முகப்புத்தகம், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த செயலிகளுக்கான ரவுட்டரில் ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சமூக வலைத்தளங்கள் இன்று அதிகாலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன் குறித்த இடையூறுக்கு தாம் மன்னிப்பு கோருவதாக முகப்புத்தக நிறுவனத்தின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here