இலங்கை ரக் போல் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராக வல்வையைச் சேர்ந்த எஸ்.ஜிவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை இலங்கை ரக்போல் சம்மேளனம் அண்மையில் வழங்கியுள்ளது. வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த இவர் மருதங்கேணி பிரதேச செயலக விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.







