தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான திலீபனின் 33ஆவது நினைவேந்தலை கடைப்பிடிக்க முயன்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினரும், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வைத்து எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்த கூடாது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, யாழ்ப்பாணம் பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், திலீபனின் நினைவேந்தலை நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.









