பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்த பகுதி ஒன்றினுள், பாரஊர்தி ஒன்றை வேகமாகச் செலுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாரஊர்தியில் சிக்கி குறைந்தது 80 பேர் பலியானதாகவும், 100இக்கும் அதிகமானோர் காயமடைந்தாகவும், பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, பாரஊர்தியின் ஓட்டுனர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்சின் தேசிய நாள் நிகழ்வின் போது, நேற்றிரவு பொதுமக்கள் கூட்டத்தினுள் உச்ச வேகத்தில் பாரஊர்தியைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனம் செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
எனினும், பிந்திய நிலைமைகள் தொடர்பான தகவல்களுக்கான அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பிரான்சில் அவசரநிலைப் பிரகடனம் நீடிக்கப்பட்டுள்ளது.
JVP NEWS