மனநலம் பாதிக்கப்பட்டவரின் கத்திக் குத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் மரணம்

0
847 views

பருத்தித்துறை, வியாபாரிமூலைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி அகால மரணமடைந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது 49) என்பவரே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார்.

இன்றைய தினம் குறித்த நபர் வீதியால் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கூரான கத்தியால் கழுத்துப் பகுதியில் வெட்டியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here