பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ்

0
500 views

பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here