றெயின்போ விளையாட்டுக்கழகம் நடாத்தும் மறைந்த கழக வீரர்களின் ஞாபகார்த்தமான மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் 21/07/2024 இல் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உதயசூரியன் அணியினை எதிர்த்து றெயின்போ அணியானது மோதியது .
கௌசிகனின் சிறப்பான கோல்காப்பு கைகொடுக்க றெயின்போ விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் பரபரப்பான போட்டியில் இறுதியாட்டத்திற்கு அதிரடியாக நுழைந்தது உதயசூரியன் அணி
உதயசூரியன் அணியானது 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
கோல் அடித்தோர்
உதயசூரியன் கழகம்:
பிரசன்னா 1
பிரதாபன் 1
றெயின்போ கழகம்:
பிரணவன் 1
போட்டியின் ஆட்டநாயகனாக பல கோல்வாய்ப்புக்களை தடுத்த உதயசூரியன் அணியின் கோல்காப்பாளர் கௌசிகன் தெரிவு செய்யப்பட்டார்.








