கடையில் பணிபுரியும் யுவதியைத் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய வல்வெட்டித்துறைப் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஆறு மாதங்களாக தன்னைக்காதலிக்குமாறு கூறி துன்புறுத்தி வந்த வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு எதிரான குறித்த யுவதியால்; கடந்த 25 ஆம் திகதி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இச்சூழ்நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்களாகியும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் நேற்று இளவாலைப் பொலிஸ் நிலையத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.