யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி…. கொரோனா தொற்று சந்தேகம்!

0
714 views

யாழ்.தாவடியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி இன்று நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here