வல்வை உதயசூரியன் கழகத்தினால் இரண்டாம் நாளாக தொடர்ந்து வழங்கப்படும் உணவுப்பொதிகள்

0
1,167 views

கொரோனா வைரசினால் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு, முக்கியமாக அன்றாடம் தொழில் புரிந்து வாழும் குடும்பங்களுக்கு இன்றும் இரண்டாம் நாளாக தொடர்ந்து  வல்வை உதயசூரியன் கழகத்தினால் வல்வெட்டித்துறையில் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

இது சம்பந்தமாக வல்வை உதயசூரியன் கழக தலைவர் திரு.முருகுப்பிள்ளை ஜெயதரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது

அவர் முதலில் ஊரடங்கு சட்ட நேரத்தில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்த வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

வல்வை உதயசூரியன் கழகத்தினுடன் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டவர்

இந்த உதவிகளுக்கான நிதி உதவிகளை வல்வை உதயசூரியன் கழகம் பிரித்தானியாவும் வல்வை உதயசூரியன் கழகம் கனடாவும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் உதயசூரியன் கழக பிரித்தானியா, கனடாவும் நிர்வாகங்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் ஆதரவுடன்  உதவிகளை தொடர்ந்து வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here