உதயசூரியன் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்..
வல்வை உதயசூரியன் கழகம் வல்வையின் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடாத்தும், அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று தீருவில் மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது.
விலகல் முறையில் நடைபெற்றுள்ள இன்றைய முதலாவது போட்டியில், சுமார் 25 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கியிருக்கும் வல்வை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது.
இச் சுற்றுப்போட்டி முடிவடைந்த பின்னர் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









