சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை ம.வி

0
831 views

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்.

குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் தொண்டைமனாறு வீ.மகாவித்தியாலயமும் புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயமும் மோதின.5செற்களைக் கொண்ட இப் போட்டியில் முதல்  இரு செற்களையும் 25:17 27:25 என தொண்டைமனாறு கைப்பற்ற மூன்றாவது செற்றை 25:20 என சோமஸ்கந்தா பெற்றுக்கொண்டது.நான்காவது செற்றில் அபாரமாக செயற்பட்ட தொண்டைமனாறு அணி 25:18 என்ற புள்ளிகளைப் பெற்று 3:1 செற்றில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here