பிரதீபனின் அசத்தலான கோல் தடுப்பும், ராகவனின் கோலும் கை கொடுக்க அரையிறுதிக்கு தகுதி பெற்றது உதயசூரியன்…

0
568 views

பிரதீபனின் அசத்தலான கோல் தடுப்பும், ராகவனின் கோலும் கை கொடுக்க அரையிறுதிக்கு தகுதி பெற்றது உதயசூரியன்…


நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுபோட்டியில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இளங்கதிர் அணியினை எதிர்த்து உதயசூரியன் கழகம் மோதியது.

போட்டியின் முற்பாதியில் ராகவனின் கோல் கைகொடுக்க, 1:0 என முன்னிலை பெற்றது உதயசூரியன். இரண்டாம் பாதி முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் இளங்கதிர் அணி ஓர் கோலினை போட்டு ஆட்டத்தினை சமநிலைப்படுத்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணியினரும் கோல் போடுவதற்காக எதிரணியின் கோல் பரப்புக்களை ஊடுருவிய போதும் அந்த முயற்சிகள் அனைத்தும், இரு அணிகளின் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் தடுக்கப்பட்து.

வெற்றியை தீர்மானிப்பதற்காக நடுவரினால் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் பிரதீபன் அசத்தலாக 3 பந்துகளை தடுக்க, சிவஞானம், விதுசன் மற்றும் ரஜீவன் ஆகியோர் கோல்களை போட, 3 : 2 என்ற கோல்கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் ரேவடி அணியினரை எதிர்த்து உதயசூரியன் அணியினர் மோதவுள்ளமை குறிப்பிட தக்கது.
வெற்ற வீரர்களுக்கு வாழ்த்துவததோடு, அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here