ஐ.பி.எல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
11 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் சித்தரை மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அணிகள் சார்பில் ஒவ்வொரு அணிகளும் முக்கிய 3 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துள்ளன. மேலும் ஏனைய வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் நேற்று மற்றும் இன்று பெங்களுரில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக மகேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, டு பிளிசிஸ், ஹர்பஜன் சிங், வெயின் பிராவோ, ஷேன் வாட்சன், கெதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர், கரன் சர்மா, நரேந்திர தாஹிர், நாராயன் ஜெகதீசன், மிச்செல் சாந்தர், தீபக் சஹார், கேஎம் ஆசிஃப், லுங்கி நிகிடி, கனிஷ் ஷெத், துருவ் ஷேரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், ஷித்திஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்னோய் ஆகிய 25 வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.