கஞ்சா போதையில் பாதசாரிகளுக்கு நவீன ரக காரைச் செலுத்திச் சென்ற மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த மூவரை நெல்லியடிப் பொலிஸார் நேற்று வல்லையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
நேற்றுக் காலை நவீன காரில் வநாத மூவர் போதையில் அரசடிப் பகுதியிலுள்ள மின் கம்பத்துடன் மோதி பின்னர் நெல்லியடி நகரப் பகுதியில் ஒருவரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக நெல்லியடிப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினதை அடுத்து பொலிஸார் அக்காரை துரத்திச் சென்று வல்லை வெளியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.காரைப் பரிசோதனை செய்த போது அதற்குள் கஞ்சா கலந்த குறை பீடி காணப்பட்டதை அடுத்து மூவரைறும் கைது செய்து நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில்ல் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் .கைது செய்யப்பட்ட மூவரும் கடும் போதையில் இருந்ததாகவும் அவர்கள் ஏறாவுரைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.