டென்மார்க் பாடசாலை சதுரங்கப் போட்டியில் வெள்ளிக்கிண்ணம் வென்ற தமிழ் சிறுவன்.

0
859 views

 

டென்மார்க் நாட்டில் பாடசாலைகளுக்கான சதுரங்கக் கிண்ணப் போட்டியில் வெள்ளிப்பதக்கம்  வென்று சாதனை.

 

13 வயது தமிழ் சிறுவன் ஆதேஷ்  டென்மார்க் ல் பாடசாலை சதுரங்கக் கிண்ணப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று Nordic Chess  Champion , Europian  Youth Chess Champion   போட்டிகளில் பங்குபற்றுவதற்கு  தெரிவு செய்யப்பட்டுள்ளார்..

 

நாடளாவிய ரீதியில் 180  இளையோர், சிறுவர் இப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆதேஷ்   ஈஸ்வரலிங்கம் 2  ம் இடம் பெற்று ஈழத் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் நோர்வேயில் அடுத்த வருடம் நடைபெறும் Nordic Chess Champion ற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரூமேனியாவில் 2017  ல் நடைபெறும்  Europian Youth Chess  Champion  போட்டியிலும் கலந்து கொள்வதற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆதேஷ் சிறு  வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவரின் மற்றைய 3 சகோதரர்களும்  சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

ஆதேஷின் தந்தை ஈசன் யாழ் வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்தவர். தாயார் ஜெயந்தி  சுதுமலை யை சேர்ந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here