பொதுநிர்வாக அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

0
444 views

இந்த விருதினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டாரவிடமிருந்து நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டார்.
பொதுநிர்வாக அமைச்சு ஆண்டு தோறும் உற்பத்தி திறனில் மேன்மையுடன் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையில் நடத்தி வரும் போட்டியில் உற்பத்தி திறன் 2015ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.
இரத்மலானை ஸ்ரைன் அரங்கில் உற்பத்தி திறன் 2015 வருடத்திற்க்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பொது நிர்வாக அமைச்சர் மத்தும பண்டார அமைச்சர்களான நிமால் சிறிபாலடிசில்வா  எ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமைத்துவம் சேவைகளின் தரம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன்பாவனையாளர்களின் திருப்தி என்பவற்றை அடிப்படையாக கொண்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலிலே வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தேசியமட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here