மேற்படி ஆலயத்தில் முருகன் , சண்டேஸ்வரர் , குலதெய்வம் காவல்க்காரன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும புதிய தூபிகள் அமைப்பதற்காக இன்று காலை 09-11-2016 ஐப்பசித் திங்கள் 24 ஆம் நாள் புதன்கிழமை சதய நட்சத்திரம் , சித்தாமிர்த யோகம் கூடிய காலை 7.50 -8.30 மணிக்குள் தனுலக்கினத்தில் சங்குஸ்தாபனம் வுல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் ஆலய பிரதமகுரு ப.மனோகரக்குருக்களின் சமய கிரியைகளுடன் நடைபெற்றது.
இதில் கட்டட ஆச்சாரியாகிய அராலியூர் மோகன் , பிரபா ஆச்சாரியார்கள் கலந்து கொண்டனர். அத்துடன் மடத்தடி மக்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி தூபிகள் முறையே
முருகன் : சிறிகண்ணன்-சதீஸ்கண்ணன் குடும்பம்
சண்டேஸ்வரர் : கா.ஞானவேல் குடும்பம்
காவல்க்காரன் : க.தெட்சணாமூர்த்தி குடும்பம்
கட்டி முடிக்கவுள்ளனர். அத்துடன் நாகதம்பிரான் மகாலக்ஸ்மி தூபிகள் கட்டப்பட உள்ளதால் விரும்பியோர் ஆலய தர்மகர்த்தா சபையுடன் தொடர்பு கொள்ளவும்.

















































































