NEPLஇனை வெற்றியுடன் ஆரம்பித்தது VALVAI FC

0
682 views

NEPLஇனை வெற்றியுடன் ஆரம்பித்தது VALVAI FC

இந்த வருடத்துக்கான முதலாவது போட்டியில் கடந்த வருடத்தின் இரண்டாம்
இடத்தினை பெற்ற கிளிநொச்சி கிளியூர் கிங்ஸ் அணியிணை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் மோதியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த VALVAI FC அணியானது முதல் பாதி ஆட்டத்தில் ஜேசுதாஸனின் கோலின் மூலம் 1:0 முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி  ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய VALVAI FC
நிதர்ஷனின் சிறப்பான கோலின் ஊடாக இரண்டாவது கோலினை பெற்று முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத நேரம் கிளியூர் கிங்ஸ் வீரனின் கோலின் ஊடாக ஆட்டம் அனல் பறக்க தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக VALVAI FC நம்பிக்கை நட்சத்திரம் அபீஸ் இன் சிறப்பான கோலின் ஊடாக வெற்றியினை உறுதி செய்தார். ( 3 : 1)
ஆட்டநாயகனாக valvai fc அவீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த பருவ காலத்திற்கான வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் நேற்றய தினம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக பிறிமியர் லீக் வடிவிலான சுற்றுத்தொடரில், வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் களமிறங்கிய இத் தொடரில், 66 லீக் போட்டிகள் மற்றும் ப்ளே ஓவ், இறுதிப்போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக ஒழுங்கமைக்கப்பட்டிருந்து. அத்தொடரின் வெற்றிக்குப்பின் தற்போது அதன் இரண்டாவது பருவகால போட்டிகளும் ஆரம்பமாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இருந்து நான்கு அணிகளும், மன்னார் மாவட்டத்திலிருந்து இரண்டு அணிகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சுற்றுத் தொடரில் பங்குபற்றும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதிக்கொள்ளுமாறு அட்டவனை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தினை போல் இந்த வருடமும் ஞானரூபன் தலைமையில் வல்வை எப்.சி களமிறங்கியுள்ளது. இந்த வருடத்துக்கான தமது முதல் போட்டியில் கடந்த வருடத்தின் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட கிளியூர் கிங்ஸ் அணியிணை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வல்வை எப்.சி அணியானது முதல் பாதி ஆட்டத்தில் ஜேசுதாஸனின் கோலின் மூலம் 1:0 முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய வல்வை எப்.சி நிதர்ஷனின் சிறப்பான கோலின் மூலமாக இரண்டாவது கோலினை பெற்று போட்டியில் முன்னிலை பெற்றனர். இதனை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத விதமாக கிளியூர் கிங்ஸ் வீரனின் கால்களில் இருந்து பறந்த பந்து கோல்க்கம்பங்களுக்குள் நுழைந்தது. இதனால் ஆட்டம் மேலும் வேகமடைந்தது. இரு அணிகளும் பலமாக மோதிக்கொண்ட போதும் வல்வை எப்.சி நம்பிக்கை நட்சத்திரம் அபீஸ் இன் சிறப்பான கோலின் ஊடாக வல்வை எப்.சி தமது வெற்றியினை உறுதி செய்தனர். இறுதியில் வல்வை எப்.சி 03:01 என்ற கோல்க் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக வல்வை எப்.சியின் அவீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த வருடம் மூன்றாவது இடத்தினை பிடித்திருந்த வல்வை எப்.சி அணியில் இடம்பிடித்திருந்த வீமா, அகீபன், மதுசன், திலீபன், அமித், சங்கா இப்படியான நட்சத்திர பட்டாளம் இந்த பருவகாலத்தில்(ஏலம் மூலமாக) வேறு அணிகளுக்கு மாறியுள்ளது வல்வை எப்.சியின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றகரமான விடையமாக இருந்தாலும் கூட இந்த பருவகாலத்திற்கான அணியில் இடம்பிடித்துள்ள தேசிய நாயகன் நிதர்சன், கீதன், ஜேசுதாசன், யுனிற்ரன், பிரதீபன், தங்கன் ஆகியோருடன் கடந்த வருடம் அணியில் எந்த வெளிநாட்டு வீரரும் இல்லாத குறையினை தீர்க்கும் முகமாக இந்த வருடம் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் என்று எமக்கு நம்பிக்கையூட்டும் வகையில் புதிய வீரர்கள் வரவும் அமைந்துள்ளது.

வல்வை எப்.சி அணிக்கு பாரிய சவாலாக அமையப்போகும் விடையமாக இருக்கப்போவது, தொடரின் நடுப்பகுதியில் உலகக்கிண்ண தகுதிகான் போட்டிகளுக்கான தேசிய அணி பயிற்சிகளுக்காக, அணியில் இடம்பிடித்துள்ள இரண்டு தேசிய வீரர்களான யூட்சுமன் மற்றும் நிதர்சன் ஆகியோர் செல்லவுள்ள நிலையில், அவர்களுக்கான சரியான மாற்றீட்டு வீரர்களாக யாரை வல்வை எப்.சி களமிறக்க போகின்றது என்பதிலும், மாற்றீடாக வரும் வீரர்கள் எவ்வாறு தங்கள் மீதான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்பதில் தான் அவர்களின் அடுத்தகட்ட பயனங்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வல்வை எப்.சி அணியானது வரும் 10ம் திகதி ரிங்கோ ரைரன்ஸ் எப்.சி அணியுடன், யாழ் ரசிகர்கள் முன்னிலையில் துரையப்பா விளையாட்டரங்கில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளியூர் கிங்ஸ் அணியுடன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துவதோடு, இத் தொடரில் சிறப்பாக செயற்பட்டு ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றவும் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here