ஆசிரியர் கி.செல்லத்துரை எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.11.2016 மாலை 3.00 மணிக்கு வல்வை அமிதக பாடசாலை அரங்கில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வின் ஓரங்கமாக முதலாவது பிரதி வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இன்று காலை முதலமைச்சர் காரியாலயத்தில் இருந்து நூல் முதற்தடவையாக உலகின் கண்களுக்கு தரிசனமாவது தமக்கு பெருமை தருவதாக நூலாசிரியர் கி.செ.துரை மகிழ்வு வெளியிட்டார்.
விழாவின் முதன்மை விருந்தினராக பங்கேற்கும் இந்தியத்தூதரகம் யாழ்ப்பாணத்தின் துணைத்தூதுவர் திரு.ஆ.நடராஜன் அவர்களுக்கும் நூல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விழாவின் முக்கிய விருந்தினராக பங்கேற்கும் வடமாகாண சபையின் அவை முதல்வர் திரு. சி.வி.கே சிவஞானம் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இன்றைய உதயன் பத்திரிகையிலும் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.