வல்வை உதயசூரியன் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பெயர் கண்டு பிடிக்கும் போட்டியில் 33 பேர் பங்குபற்றியுள்ளனர். வெற்றி பெற்றோர் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். முதல் கட்டமாக புகைப்படத்தில் உள்ள 47 பேருடைய பெயர் விபரங்கள்
இந்த புகைப்படத்தில் உள்ள அங்கத்தவர்கள் அல்லது உறவினர்களுக்கு அன்பான வேண்டுகோள்
திரு. விசியகுமார் குண்டையா இராஜசிங்கம் ஆகியோர் இணைந்து புகைப்படத்திலுள்ள 47 அங்கத்தவர்களுக்கும் உதயசூரியன் கழகத்திற்குமான உறவுகள் பற்றி சிறு குறிப்புக்கள் எழுதி எமது இணையத்தளத்தில் வெளியிட உள்ளனர்.
எனவே புகைப்படத்தில் உள்ளோர் இன்று சுமார் 45 வருடங்களின் பின்பு எப்படி உள்ளீர்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம் அண்மைக்காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை எமது மின்னஞ்சல் முகவரிக்கு( valvainewsorg@gmail.com) அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கியமாக புகைப்படத்திலுள்ள கழக அங்கத்தவர்கள் சிலர் தற்போது எம்முடன் இல்லை அவர்களைப் பற்றி நாம் எமது இளைய சமுதாயத்திற்கு தெரிவிப்பது கடமையாகும். எனவே இறைவனடி சேர்ந்த அங்கத்தவர்களுடைய புகைப்படங்களை உறவினர்கள் முன்வந்து எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்