மேற்படி நிகழ்வானது நேற்று 16.09.2016(வெள்ளிக்கிழமை) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஊறணி தீர்த்த சமூத்திரத்தில் தீர்த்தமாடிய விநாயகப்பெருமான் நண்பகல் வல்வை முத்துமாரியம்மன் கோயில் ஊடாக வல்வை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் தங்கி இருந்தார்.
அதன் பின் அடியவர்களுக்கு வரவேற்பு குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7.00மணிக்கு சிவன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட விநாயகப்பெருமான் வரவேற்பு பந்தலை இரவு 8.00 மணிக்கு வந்தடைந்தார்.
அங்கு வரவேற்பு குழுவினராகிய மடத்தடி இளைஞர்கள் விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் மையிலியதனை தெட்சணாமூர்த்தி, துளசி, மயூரன் குழுவினரின் நாதஸ்வர இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 9.00மணியளவில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் “கற்புக்கரசி சாவித்திரி” என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்வு 10.30மணிவரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வல்வை முத்துமாரியம்மன் மோர் மடத்தில் விநாயகப்பெருமானுக்கு மண்டகப்படி வைக்கப்பட்டு அடியவர்களுக்கு வடை,கோப்பி என்பன வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் ஆலயம் நோக்கி புறப்பட்டார். இவ்வரவேற்பு உபசாரம் மடத்தடி இளைஞர்களால் மிகவும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.