கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருதனார்மடம் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சிறீலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார்.
இவரின் உடல் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.








