பிரித்தானிய கால்பந்தாட்ட ரசிகர்கள் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதி
பிரித்தானியாவின் கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலர் பிரான்ஸில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டமையால், காயமடைந்த பல பிரித்தானிய பிரஜைகள் பிரான்ஸில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த தகவலை, இங்கிலாந்துக்கான தூதுவர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ரசிகர்களிடையே கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்டு வருகின்ற மோதல்கள் காரணமாகவே பிரித்தானிர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த மோதல்களினால் காயமுற்றுள்ள பிரித்தானியர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனையவர்கள் சிறுசிறு காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே அனுமதிக்க்பபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.