மாகாண ஆணையாளரிடம் அரசாங்க ஆயுள்வேத மத்திய மருந்தகம் வல்வையில் அமைத்தல் தொடர்பான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பல பாடசாலைகளும், பொது அமைப்புக்களும் உள்ளன. மக்களின் மருத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது நலன்விரும்பிகளின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இதனையடுத்து இக் கோரிக்கை தொடர்பான கடிதம் பொது மக்களிடம் இருந்து ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.