பலம்பெருந்திய பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தை 2:0 என்ற நெர் செற்கணக்கில் வெற்றி கொண்டு இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது வல்வை விளையாட்டுக் கழகம்.பருத்தித்துறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு செய்த கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆண்களுக்கான ஆட்டங்கள் மாதனை விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்றன.
இதில் அரையிறுதியாட்டத்தில் பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர் கொண்ட வல்வை அணி 2:0 என்ற நேர் செற்கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.