வல்வெட்டித்துறை சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்ட Hand ball அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரிந்தானியாவில் லண்டன் மிச்சம் பகுதியில் வாழ்ந்துவரும் வல்வெட்டிதுறையை சேர்ந்த யோகச்சந்திரபோஸ் சுபாஷினி தம்பதிகளின் மகன் சிறுவயது முதல் விளையாட்டின் மீது திவிர பற்றுக்கொண்டு தனது முயற்சி மற்றும் தனது பெற்றோரின் ஆதரவுடன் Hand ball பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார் இதன்மூலம் தமிழ் மக்களுக்கும் வல்வைக்கும் பெருமையை தேடிதந்துள்ளார்
Hand ball விளையாட்டு ஜரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். நோர்வே சுவீடன் டென்மார்க் பின்லாந்து போன்ற நாடுகளில் உதைபந்தாட்டத்தை விட பிரபலமான விளையாட்டாக Hand ball விளங்குகின்றது.