பருத்தித்துறை வாரியேர்ஸ் மற்றும் புலோலியூர் இளம்தளிர் விளையாட்டுக் கழகம் மாவட்ட ரீதியாக நடாத்திய மென் பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி கடந்த திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை வாரியேர்ஸ் மற்றும் புலோலியூர் இளம்தளிர் விளையாட்டுக்கழக தலைவர் அ பிரதாபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக ஒய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் பா .இரகுநாதன்,பொறியிலாளர் பி .வி .ராஜ்குமார், பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பூ .சஞ்சீவன், அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் பு .கனகராஜா, ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனார்.
முதலில் இடம் பெற்ற அணிக்கு 06 ஓவர்கள், 08 வீரர்களை கொண்ட மாபெரும் மென்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் வல்வை அணி, வீனஸ் அணியிடம் 04 இலக்குகளால் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை சுவீகரித்தது. பின்னர் இடம் பெற்ற அணிக்கு 05 ஓவர்கள் 06 கொண்ட சுற்றுப் போட்டியில் மாலிசந்தி மைக்கல் அணியினர், கரவெட்டி ஸ்பேஸ் அணியினரை 17 ஓட்டங்களால் வீழ்த்தினர்.












