அண்மையில் வவுனியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவி வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் படுகொலைக்கு நீதி வேண்டி வடமாகாணம் முழுவதும் பூரண கடையடைப்பு மேற்கொள்ளுமாறு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இன்றைய தினம் வடமராட்சிப் பகுதியில் இக்கடையடைப்பு முழுமையாக அனுட்டிக்கப்பட்டது. பருத்தித்தறை.நெல்லியடி, வல்வெட்டித்துறை மற்றும் உடுப்பிட்டிப் பகுதிகளிலுள்ள பிரதான சந்தைகள் இயங்கவில்லை. அரச திணைக்களங்கள் இயங்கிய போதும் பொது மக்களின் வருகை குறைவாகக் காணப்பட்டது.
பாடசாலைகளுக்கு அதிபர் ஆசிரியர்கள் வருகை தந்த போதும் மாணவர்களின் வரவின்மையால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.நகரப்பகுதி உட்பட் இப்பகுதியில் காணப்படும் அரச தனியார் வங்கிகள் தமது சேவைகளை வழமை போல்; மேற்கொண்டிருந்தன.இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் சேவைகள் இடம்பெற்றபோதும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை.