திரு கா புண்ணியமூர்த்தி ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் றெயின்போ விளையாட்டுக் கழகம் 41 ஓட்டங்களால் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்பியனாகியது. லீக் முறையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த றெயின்போ நேதாஜி சைனிங்ஸ் மற்றும் தீருவில் அணிகள் பிளே ஓவ் க்கு தகுதி பெற்றது.
முதல் இரு இடங்களை பிடித்த றெயின்போ மற்றும் நேதாஜி அணிகள் மோதிய ஆட்டத்தில் றெயின்போ அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, சைனிங்ஸ் மற்றும் தீருவில் அணிகள் மோதிய ஆட்டத்தில் வெற்றி பெற்ற சைனிங்ஸ் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் சைனிங்ஸ் அணி 04 இலக்குகளால் நேதாஜி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் றெயின்போ அணியுடன் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணிஇ சைனிங்ஸ் அணியின் அபார பந்து வீச்சின் காரணமாக 51 ஓட்டங்களுக்கு ஏழு இலக்குகளை இழந்து தடுமாறிய போது கபிலனின் அதிரடியாக துடுப்பெடுத்தாடி இரண்டு ஆறுகள் உற்பட 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும்இ மணிமாறன் 15 ஓட்டங்களையும் குவிக்க றெயின்போ அணி 11 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 79 ஓட்டங்களை குவித்தனர்.
பதிலுக்கு 12 பந்துப்பரிமாற்றத்தில் 80 ஓட்டங்களை குவித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சைனிங்ஸ் அணியினர் றேயின்போ அணியில் அபார பந்துவீச்சின் காரணமாக 9.3 பந்துப்பரிமாற்த்தில் 38 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். றெயின்போ அணி சார்பாக பந்துவீச்சில் ஜெகன், ருதேஷா மற்றும் மணிமாறன் தலா 2 இலக்குகளையும், கபிலன் மற்றும் பிரணவன் தலா ஓர் இலக்கினையும் வீழ்த்தினர். இறுதிப்போட்டியில் றெயின்போ அணியின் வீரன் மணிமாறனால் மிகச் சிறப்பான ஓர் பிடியெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 10 அடி தூரம் காற்றில் மிதந்து லாவகமாக ஓர் பிடியெடுப்பை மேற்கொண்டிருந்தார். சர்வதேச வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அந்த பிடிபெடுப்பினால் மைதானமே கரகோசத்தால் அதிர்ந்தது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக றெயின்போ அணியின் கபிலனும், தொடராட்ட நாயகனாக சைனிங்ஸ் அணியின் பிரசாந்தும், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஓர் அரைச்சதம் உற்பட (99, 6×11, 4×6) 200 மேற்பட்ட ஓட்டங்களை குவித்த றெயின்போ அணியின் பிரகலாதனும், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக 16 இலக்குகளை வீழ்த்திய சைனிங்ஸ் அணியின் பிரசாந்தும், வளர்ந்து வரும் வீரராக உதயசூரியன் அணியின் ரமணனும் தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த முறையும் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியிலும் றெயின்போ அணியே கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.வல்வைக்குற்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட தொடர்களில் தொடர்ச்சியாக 10 ற்கு மேற்பட்ட தடவைகள் றெயின்போ அணி கி்ண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










