மைலோ வெற்றிக் கிண்ணத்துக்காக மூன்றாவது தடவையாக நடத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்று வருகின்றன .அதில் நேற்று இடம் பெற்ற காலிறுதியாட்டம் ஒன்றில்வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டம் ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில் ஆதிசக்தியின் கௌரி தர்சன் முதல் கோலைப் போட ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.நிமிடங்கள் நகர பந்தும் அங்கும்இங்கும நகர்ந்து கொண்டிருந்தது. இச்சூழ் நிலையில் பதில் கோல் ஒன்றைப்போட்டு ஆட்டத்தைச் சமனிலைக்குக் கொண்டு வந்தார் மணிவண்ணன் அடத்த கணம் கௌரி சங்கர் கோல் போட 2:1 என முன்னிலை பெற்றது ஆதpசக்தி விளையாட்டுக்கழகம்.
இடைவேளையின் பின் ஆரம்பமானதும் மறு நிமிடம். தொண்டைமனாறு அணியின் சுரேன் .தொடர்ந்து இரு அணியும் கோல் போடுவதற்கு முயற்சித்த போதும் அது இலகுவில் கைகூடவில்லை.இதனால் ஆட்டம் சமனிலையில் முடிவடையப் போகிறது என பார்வையாளர்கள் எண்ணியிருந்த வேளை இறுதி நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட 3:2என்று வெற்றி பெற்று அரையிறுதிக்குள் சென்றது ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்.
அடுத்து இடம்பெற்ற மற்றொரு காலிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகமும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் மோதின. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம பெற்ற இவ்வாட்டத்தில் பலத்த போராட்டத்தின் பின் 1:0 என்று வெற்றி பெற்று அரையிறுதிக்கும் தகுதி பெற்றது வல்வை விளையாட்டுக் கழகம்