மைலோ வெற்றிக்கிண்ணத்துக்காக நெஸ்லே லங்கா நிறுவனம் மூன்றாவது ஆண்டாக நடத்தும் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது .
காலை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் எம். நவநீதமணி செயலாளர் அ.அருளானந்த சோதி கம்பர்மலை அ.த.க. வித்தியாலய அதிபர் எஸ் . ரவீந்திரன் யாழ்மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகனதாஸ் மற்றும் நெஸ்லே லங்கா நிறுவன விற்பனை மேம்படுத்தல் அனுசரணை பிரதி முகாமையாளர் குர்சித் அஅஹ்மட் உட்பட்ட நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பருத்தித்துறை லீக்கிற்க்குட்பட்ட 15 மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றுகின்றன.
இன்றைய முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதpர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியதில் வல்வை விளையாட்டுக்கழகம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.