மைலோ வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கில் இருந்து வல்வை விளையாட்டுக்கழகம் சென்சேவியர் விளையாட்டுக் கழகம் ஆகியன தகுதி பெற்றுள்ளன.நெஸ்லே லங்கா நிறுவனம்மூன்றாவது ஆண்டாக நடத்தும் மைலோ வெற்றிக் கிண்ணத்துக்கான முதல்வர் கட்டப் போட்டிகள் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றன.இதில் நேற்று முன்தினம்இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.மாவட்டப் போட்டிகளுக்கு அணியைத் தெரிவு செய்வதற்கான இறுதி ஆட்டம் என்பதால் பரபரப்பு நிலை காணப்பட்டதுடன் பதற்றமும் இரு அணயின்இடமும் அழையா விருந்தாளியாகத் தொற்றிக் கொண்டது .இதனால் கோல் போடும் பல சந்தர்ப்பங்கள் கோட்டை விடப்பட்டன.
எவ்வளவோ முயற்சி செய்த போதும் ஆட்ட நேரம் முடிவடையும் வரை இரு தரப்பாலும் கோல்பதியப் படாது விட சமனிலையில் ஆட்டம் நிறைவடந்தது.இதன அடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்ககாக சமனிலை தவிர்ப்பு வழங்கப்பட்டது.போட்டியின் ஆரம்பத்தில் இருந்த பதற்றம் இப்போது பன்மடங்காக அதிகரித்திருந்தது.இதன் வெளிப்பாடு இரு அணியினரும் முதல் மூன்று பந்துகளையும் மாறி மாறி வெளியில் அடித்தவண்ணணம் இருந்தனர்.இருந்த போதும் பலத்த போராட்டத்தின் பின் 2:1 என வெற்றி பெற்று மாவட்ட மட்ட்ப் போட்டிக்குத் தகுதி பெற்றது வல்வை விளையாட்டுக்கழகம்.
தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகமும் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.முதலாவதாக இடம் பெற்ற ஆட்டம் போல் பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் குறைவில்லாமல் இவ்வாட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் ஆதிசக்தியின் கௌரிதர்சன் முதல் கோலைப் போட வீறுகொண்டெழுந்த சென்சேவியர் அணி பதில் கோலைப் போடமுடியாது திண்டாட முதல் பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது. இரண்டாம்நிலை ஆட்டத்தின் முதல் பதின்ம நிமிடம் வரை இதேநிலை தொடர 12நிமிடத்தில் அனஸ்ரின் பதில் கோலைப்போட்டார.இறுதி வரை இந்த நிலை நீடிக்க சமனிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது.இதில் 5:4என்று வெற்றி பெற்று மாவட்டம் போட்டிகளிற்குத் தகுதி பெற்றது சென்சேவியர் விளையாட்டுக்கழகம்.