வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பலவழிகளில் தொடர்ச்சியாக தமது பங்களிப்பினை பிரித்தானிய வல்வை நலன்புரிச்சங்கம் வழங்கி வருகின்றது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக VEDA கல்வி நிலையத்தின் ஊடக வல்வை மாணவர்களின் கல்வி பணிக்கு தமது நிதிப்பங்களிப்பினை தொடச்சியாக வழங்கி எமது வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
எமது வல்வை மாணவர்களின் நிலையான கல்வி அபிவிருத்தி பணிக்கு நிரந்தரமானதும் வல்வை மாணவர்களுக்கு சொந்தமனதுமான இடம் ஒன்று தேவை என்ற நிலையான கல்வி அபிவிருத்தி செயற்பாட்டினை உணர்ந்து, வல்வை மாணவர்களுக்கு என நிரந்தர இடம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு ரூபா பதினைந்து இலட்சத்தினை (1,500,000.00)வழங்க முன்வந்து உறுதி அளித்துள்ளனர்.
VEDA கல்வி சமூகத்தால் வல்வை மாணவர்களின் நிரந்தர கல்வி செயற்பாட்டிற்கு சொந்தமாக இடம் ஒன்று தேவை என்ற அடிப்படையில்இ 7.45 பரப்பளவு கொண்ட நிலப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டு இதனை கொள்வனவு செய்ய உதவுமாறு அணைத்து மக்களுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இதன் அடிபடையில் பிருத்தானிய வல்வை நலன்புரிச்சங்கம் இரண்டு (02) பரப்பு காணியினை கொள்வனவு செய்ய தமது பங்களிப்பினை வழங்க முன்வதமைக்கு VEDA கல்வி சமூகம் தமது நன்றிகளை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அறிக்கை இனைக்கப்படுள்ளது.
பிருத்தானிய வல்வை நலன்புரிச்சங்கத்தினை முன்மாதிரியாக கொண்டு ஏனையவர்களும் தமது பங்களிப்பினை இவ் நிலையான கல்விப்பணிக்கு வழங்கி எதிர்கால வல்வை மாணவர்கள் சிறந்த ஒரு கல்வி சமூகமாக மிளிர உதவ வேண்டும் என உங்களை அன்புடன் கோருகின்றோம்.