தீர்க்கமான ஆட்டத்தில் ஜக்சனின் அதிரடியான கோல்போடுகை மூலம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதிபெற்றது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் .
பருத்தித்துறை உதைபந்தாட்ட லிக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டக் கழகம் வட மாகாண ரீதியாக நடத்தும் உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டி குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.இதில் நேற்று முன்தினம் மின்னொளியில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மன்னார் கென்லூசியஸ் விளையாட்’டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
இரு அணியும் மிகவும் பலம் பொருந்தியதாக இருந்ததால் அவ்வாட்டத்தைக் காண பெருமளவான ரசிகர்கள் மைதானத்தை சூழ்திருந்நதனர்.அதற்கேற்றாற் போல் ஆட்டமும் அமைந்திருந்நதது. பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பமானப் போட்டியின் முதற் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் இலகுவில் கோலைப்பெற்றுக் கௌ;ள முடியவில்லை.இயலவில்லை.இதனால் முதற்பாதியாட்ட கோல்கள் பதிவு செய்யப்படாத நிலையில் ஆட்டம் சமனிலையில் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெரம்பாலும் அதேநிலையே காணப்பட ஆட்டம் சமனிலையில் முடிவடையப்போகிறது என எண்ணியிருக்க ; 55 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் வீரர் ஜக்சன் முதலாவது கோலினை பெற ஆட்டம் விறுவிறுப்பானது.; தொடர்ந்து 70 ஆவது நிமிடத்தில் ஜக்சன் மீண்டும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மேலும் ஒரு கோலினை பெற்ற அணின வெற்றி வலுப்படுத்தப்பட்டது.. போட்டியின் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாது இடம்பெற்ற ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் சென் லூசியஸ் வீரர் ரொபேட் ரோச் ஒரு கோலினை பெற்றுக் கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் சென்.மேரிஸ் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதி கோட்டிக்கு தெரிவாகியது. இரண்டு கோல்களை அடித்த ஜக்சன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். காட்சிப் போட்டியாக இடம்பெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் அல்வாய் நக்கீரன் வி.க எதிர்த்து மன்னர் சென் லூசியஸ் வி.க மோதியது. இரு அணியினரும் எதுவித கோல்களையும் பெறாது ஆட்டம் சமநிலையில் நிறைவு பெற்றது.(108)