FIRST FRESH FOOD LIMITED (LONDON ) இன் அனுசரணையுடன் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 9 நபர் 12 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மாபெரும் சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேதாஜி அணி துடுத்பெடுத்தாடி 11.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 99 ஓட்டங்களை பெற்றது. நேதாஜி அணி சார்பாக நரேன் 31, மயூரன் 28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் றெயின்போ அணி சார்பாக பிரணவன் 3 ,ஜெகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 100 இலக்கை நோக்கி ஆடிய றெயின்போ அணி முதல் பந்துப்பரிமாற்றத்திலேயே ஆரம்ப வீரர் ஜெகன் மற்றும் ஸ்ரீகரனின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது பிரகலாதன் மற்றும் பிரணவனின் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய றெயின்போ அணி வேகமாக ஓட்டங்களை குவித்தது.
9.1 பந்துப்பரிமாற்றங்களில் 85 ஓட்டங்ளை குவித்திருந்த போது பிரகலாதன் 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். பிரகலாதன் மற்றும் பிரணவன் மூன்றாவது இலக்கிற்கான இணைப்பாட்டமாக தமக்கிடையில் 51 பந்துகளில் 81 ஓட்டங்களை குவித்தார்கள். அதே பந்துப்பரிமாற்றத்தில் பிரணவனும் ஆட்டமிழக்க றெயின்போ அணியின் வெற்றி கேழ்விக்குறியானது. இருப்பினும் இறுதிப் பந்துப்பரிமாற்றத்தில் 07 ஓட்டங்கள் தேவைப்பட றெயின்போ அணியினரால் 06 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இறுதியில் 99 ஓட்டங்களயே அவர்கள் பெற முதலாவது போட்டி சமனிலையில் முடிவுற்றது. றெயின்போ அணி சார்பாக பிரகலாதன் 40 ,பிரணவன் 29 ஓட்டங்களை பெற்றனர். நேதாஜி அணி சார்பாக பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட ஜிவிந்தன் 5 இலக்குகளையும் சாய்த்து போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
2வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உதயசூரியன் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது துடுப்பெடுத்தாடிய இளங்கதிர் அணி சகல் இலக்குகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றது. இளங்கதிர் அணி சார்பாக பிரசாந் 21, கமல் 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் உதயசூரியன் அணி சார்பாக பிரசாந் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . 79 இலக்கை நோக்கி ஆடிய உதயசூரியன் அணி ஆரம்ப வீரர்களான சிவஞானம், கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் மூலம் விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. உதயசூரிய்ன் அணி சார்பாக சிவஞானம் 35 , கிருஷ்ணா 20 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர். 35 ஓட்டங்களையும் 1 விக்கெட்டையும் வீழ்த்திய சிவஞானம் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.