இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயர்மட்ட முகாமைத்துவத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவது புத்திசாதுர்யமற்றது என்பதால், தாம் பதவியை இராஜினாமா செய்வதாக J.D. மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட முகாமைத்துவம் மேற்கொள்கின்ற தீர்மானங்களில் தமக்கு திருப்தியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு மின்னஞ்சல் செய்ததாக கலாநிதி மான்னப்பெரும குறிப்பிட்டார்.
அண்மைய நாட்களில் இராஜினாமா செய்த அரச நிறுவனங்களின் இரண்டாவது தலைவர் இவர் ஆவார்.
கடந்த வாரம், தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க, தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தனது பதவியை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.








