வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் 11 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி [2015.08.10) நேற்று மாலை 4:30 மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது வல்வை அணி. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறவில்லை. 2வது பாதியில் விண்மீன் அணி கோல் ஒன்றை போட்டு முன்னிலை வகிக்க ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்கள் இருக்கும் போது வல்வை அணி அசத்தலான கோல் ஒன்றினை அடித்து போட்டியை சமனிலைப்படுத்தினர். பின்னர் தண்ட உதையில் வல்வை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.